மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

லுணுகலையில் புத்தர் சிலையை சுற்றி துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

23 ஆம் கட்டை கீனகொட பகுதியை சேர்ந்த 76 வயதுடைய ஒருவரே மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஊர் மக்களுடன் இணைந்து லுணுகலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சிரமாதன முறையில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் லுணுகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்