அக்கரைப்பற்றில் இருந்து தாயுடன் கல்முனைக்குச் சென்ற 44 வயதுடைய குடும்பஸ்தரை காணவில்லை என குறித்த நபருடைய சகோதரர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று 7ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஆனந்தராசா கோகுலராஜன்(வயது-44) என்பரே காணாமல் போயுள்ள நிலையில் இவரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை இவருடைய குடும்பத்தினர் நடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கடந்த 25ஆம் திகதி காலை 11.30 மணியளவில், தனது தாயுடன் அக்கரைப்பற்றில் இருந்து கல்முனைக்குப் ஒலிபெருக்கி சாதனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக கோகுலராஜன் சென்றுள்ளார். எனினும் குறித்த பொருள் கல்முனையில் கிடைக்காததால் அம்பாறைக்குச் சென்று அதனைக் கொள்வனவு செய்துவிட்டு வீடு திரும்புவதாகத் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து NXG Splendor ரக மோட்டார் சைக்கிளில் (இலக்கம்: VM 4706) அம்பாறைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவருடைய சகோதரர் தெரிவித்தார்.
இந்நிலையில் கோகுலராஜனைக் கண்டுபிடிப்பதற்கான தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அக்கரைப்பற்று கல்முனை அம்பாறை உள்ளிட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக வீஎம் 4706 என்ற இலக்கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் கோகுலராஜனைக் கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான ஏதேனும் தகவல்களை அறிந்தவர்கள் 075 581 8537 என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தினர் தெரிவித்தனர்.










