018ஆம் ஆண்டு வனாத்தவில்லுவ, லக்டோவத்தைப் பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் இணைந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய விசாரணை நீதிமன்றம் (Trial-at-Bar) இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நௌபர் மௌலவிக்கு, கடந்த 2026 செப்டெம்பர் மாதம் 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










