விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் இந்தியாவின் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்பட்டன.

அதில் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இந்தியாவின் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்ட நிலையில், அந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்