ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று வெள்ளிக்கிழமை முதல் காலை 08.30 முதல் பிற்பகல் 4.15 வரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பணத்தை 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்ந்த ஏனைய நாட்களில் செலுத்த முடியும் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14ஆம் திகதி காலை 8.30 முதல் நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவையும், வேறேதும் அரசியல் கட்சி ஒன்றினால் அல்லது வாக்காளர் ஒருவரினால் பெயர் குறித்த நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 75,000 ரூபாவையும் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்