மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு இன்று இரவு ஆரம்பமாகவுள்ள பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு , பழைய மாணவர்களின் பேரணி இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இதனை பாடசாலையின் சகல அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

கல்லூரியிலிருந்து ஆரம்பமான பேரணியானது மூதூர் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்து நிறைவடைந்தது.

இப் பேரணியில் அதிகளவான பழைய மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்