மட்டக்களப்பில் விபத்து: சாரதி உட்பட மாணவர்கள் படுகாயம்

கொக்கட்டிச்சோலை – தாண்டியடியில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் முச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் போது தாண்டியடி பிரதான வீதி மணப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி வேக கட்டுபாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 2 மாணவர்களும் முச்சக்கர வண்டி சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்