பனை மரத்தின் பயன்கள்

பனை மரத்தின் பயன்கள்

🟤பனையில் ஆண் பனை, பெண் பனை என இரண்டு வகைகள் உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரம் பத்து ஆண்டுகள் கழித்து 15 மீட்டர் வளரும் தன்மை கொண்டது. பத்து ஆண்டுகளுக்கு பின்னரே தான் இது ஆண் பனையா? பெண் பனையா? என்று தெரிந்துகொள்ள முடியும். இதன் இலைகள் நீளமாகவும், பச்சை நிறத்திலும், பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

பனை மரத்தின் பயன்கள்
  •  பழங்காலத்தில் உள்ள மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள பயன்பட்டது. இப்பொழுது இருக்கும் மின்விசிறிக்கு பதிலாக பழங்காலத்தில் இருக்கும் மக்கள் பனை ஓலையை விசிறியாக செய்து பயன்படுத்தினர். மேலும் கூரையாகவும், தட்டிகளாகவும் பயன்படுத்தி வந்தனர்.
  • குழந்தைகள் விளையாடுவதற்கு என நொங்கு வண்டிகள், பொம்மைகள், தொப்பி போன்றவற்றை செய்து விளையாடின. கைவினை பொருட்கள் செய்து கைத்தொழில் செய்யவும் பனைமரம் பயன்படுகிறது.
  • சிலருக்கு தொழில் புரிவதற்கான வாய்ப்புகளையும் கொடுக்கிறது. பனை ஓலைகள் மூலம் விசிறி, கூடைகள் போன்றவற்றை செய்து விற்பனை செய்யலாம், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறது
  • பனையோலையில் செய்த வீடு மிகவும் குளிர்ச்சி நிறைந்த வீடாக இருக்கும். இதனால் கோடை காலங்களில் நோய்வாய்ப்படுவதில் இருந்து விடுபடலாம்.
பனை மரத்தின் மருத்துவ பயன்கள்

🌳கோடை காலங்களில் ஏற்படும் உடல் சூடு, வியர்க்குரு போன்றவற்றை தடுப்பதற்கு நுங்கு உதவுகின்றது. மேலும் உடலுக்கு சக்தியை வழங்குகின்றது.

🌳பனை வெல்லத்தில் இருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், கண் பார்வை திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், கிட்னி கல் வராமல் தடுக்கவும் பயன்பட்டு வருகிறது.

🌳கருப்பட்டி, பனை வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை தேநீர், பால் போன்றவற்றில் கலந்து குடித்தால், மலச்சிக்கலை சரி செய்யவும், உடல் எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

🌳பனங்கள்ளு ஒரு விதமான போதைப்பொருள் என்றாலும் உடலுக்கு சில விதமான நன்மைகளையும் கொடுக்கின்றன. உடலுக்கு சக்தியையும், ஆண்மை அதிகரிக்கவும், வயிற்றுப்புண்ணை சரி செய்யவும் உதவுகிறது. இதை காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

🌳பனங்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் நீங்கும், உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பனங்கிழங்குடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும். வாயு பிரச்சனை உள்ளவர்கள் பனங்கிழங்கை மாவாக்கி உப்பு, மிளகு, பூண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

🌳பனை மரத்தின் அடி பாகத்தில் உள்ள நீரை தடவினால் கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி போன்றவை குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்