தேவநம்பிய தீசன்

தேவநம்பிய தீசனின் இயற் பெயர் தீசன் ஆகும்.

பண்டுகாபயனின் மகனான மூத்த சிவனின் மகனான இரண்டாவது மகனே தீசன் ஆவான்.

தீசனின் வரலாறு இலங்கையில் முக்கியம் பெறுவதற்கான காரணங்களாக

1.பௌத்த மதம் அறிமுகம்.
2.பிக்கு சாசனம் பிக்குனி சாசனம் அறிமுகம்.
3.வெள்ளரசு மரக்கிளை நாட்டப்பெற்றமை.
4.வரலாற்றின் முதல் விகாரை தூபாராமை விகாரை கட்டப்பட்டமை.
5.முடி சூட்டும் விழா முதலில் இடம்பெற்றது.
6.கலைகள் கல்வி வளர்ச்சி என்பன வளர்ச்சியடைந்தது.

தீசன் அரசனான பின்பு இந்தியாவின் அரசன் அசோக சக்கரவர்த்தியுடன் நட்பு பாராட்டினான். தீசனது நட்பை ஏற்றுக் கொண்ட அசோக மன்னன் தீசனுக்கு தேவ நம்பிய (கடவுளுக்கு பிரியமான ) எனும் பட்டத்தை சூட்டினான். பின் தீசன் தனது பெயருடன் இப் பட்டத்தை இணைத்து தேவநம்பிய தீசன் என்று சூடிக்கொண்டான்.

இம் மன்னன் திஸா வாவியை அமைத்து அநுராதபுர காலத்தில் அம் மக்களுக்கு பெரும் பொருளாதார சேவையை ஆற்றியுள்ளான்.

அசோக மன்னனின் மகனான மகிந்ததேரர் தலைமையில் பிக்குமார்கள் அடங்கிய குழு ஒன்று இலங்கை வந்தது.இதன் மூலமே நாட்டில் பௌத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மகிந்த தேரர் தீசனை முதன் முதலில் மிகிந்தலையில் சந்தித்தார். அப்போது தீசன் மான் ஒன்றை வேட்டையாட தயாரான போது அங்கு வந்த மகிந்த தேரர் ‘கன்னா ஹல்தி ப் டோபாமா’ அதாவது உயிர்களை கொல்லவேண்டாம் என்பதே இதன் கருத்து ஆகும்.இந்த பௌத்த வாக்கியத்தை கூறி தீசனுக்கு பௌத்த சமயத்தை போதித்த அதே தருணத்தில் தீசன் மனம் உவர்ந்து பௌத்த சமயத்தை தழுவியதாக வரலாறுகள் கூறுகின்றன.

மன்னன் பௌத்த சமயத்தை தழுவியதால் மன்னனுடைய பரிவாரங்களும் இச் சமயத்தை தழுவிக்கொண்டனர். அதே வேளை நாட்டு மக்களையும் பௌத்த சமயத்தை தழுவுமாறு மன்னன் பணித்துள்ளான்.

இலங்கையில் பௌத்த சமயம் அறிமுகமான முறைகள்

1.மகாமேகவனத்தை மகிந்த தேரர் குழுவினருக்கு வழங்கியமை.

2.பிக்குமார்கள் தானம் பெறுவதற்கு தானசாலை அமைத்தமை.

3.பிக்குமார்களின் கல்விக்காக பிரிவெனாக்களை அமைத்தான்.

4.இலங்கையில் பௌத்த சமயம் அறிமுகமான முறைகள்.

5.சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையுடன் ஜம்புகோல பட்டினத்தில் இரங்கியமை.

இலங்கையில் முதன் முதலில் தேவநம்பிய தீசனால் தூபாராம விகாரை அமைக்கப்பட்டது.இவ் விகாரையில் புத்தரின் வலது தாடை வைக்கப்பட்டுள்ளது. இவனது காலத்தில் மக்களின் கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.பிராமி எழுத்துக்கள், பாளி மொழி என்பன அறிமுகமானது.ஆராமைகள் கல்வி நிறுவனங்களாக விளங்கின.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்