சிங்கப்பூர் பொலிஸ் பணியில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் துணை பொலிஸ் அதிகாரி பணியிட வெற்றிடத்திற்காக இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.

முதற்கட்டமாக 100 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை காலை 06.30 முதல் முற்பகல் 10 வரை கொழும்பு 05 லலித் அத்துலத் முதலி விளையாட்டரங்கில் நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான தகைமைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உயர்தர பரீட்சையில் குறைந்தது 3 சீ சித்திகள், ஆங்கில மொழி தேர்ச்சி, வயது :- 21 முதல் 39 வரை, பொலிஸ் அறிக்கை, மருத்துவ ரீதியில் உடல் தகுதி, உடலில் பச்சை குத்தி இருக்கக்கூடாது, உயரம் :- 164 சீ.எம், குறைந்த பட்ச உடல் எடை :- 50கிலோகிராம் மேலதிக தகவல்களுக்கு :- 070-6788110

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்