காத்தான்குடி பொலிஸ் பிரிவில், மஞ்சந்தொடுவாய் பகுதியில் , பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
தீ பரவலை கட்டுப்படுத்த மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினருடன் பிரதேச இளைஞர்களும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.