ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நகரிலிருந்து பயணித்த உழவு இயந்திரம் சாந்தசோலை வீதிக்கு திருப்ப முற்பட்ட வேலை ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்