எலுவாங்குளம் பகுதியில் முதலையால் மக்கள் அச்சம்

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் தாமரைக்குளத்தில் தற்பொழுது அதிகளவிலான முதலைகள் சஞ்சரிப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குறித்த முதலைகள் ஆடு மாடுகளைத் தொடர்ந்தும் வேட்டையாடுவதாகவும் இதனால் தாம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குறித்த குளத்தில் முதலைகள் சஞ்சரிப்பதாக எந்த ஒரு பதாதைகளும் காட்சிப்படுத்தப்படவில்லையென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வெளிப் பிரதேசங்களில் இருந்தும் அதிகளவிலான மக்கள் குறித்த குளத்தில் வான் பாயும் பகுதிக்கு குளிப்பதற்கு வருகைத் தருகின்றனர்.

மக்கள் குறித்த பகுதியில் குளிப்பதற்கு பாதுகாப்பு வலைகளை அமைத்துத் தருமாறு குறித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்