உயிரிழந்த நபரை வங்கிக்கு கொண்டு அவரது பெயரில் கடன் பெற முயன்ற பெண்

உயிரிழந்த ஒருவரை வங்கிக்கு அழைத்து வந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளது

கைது செய்யப்பட்ட குறித்த பெண் உயிரிழந்த 68 வயதான தனது உறவினரை சக்கர நாற்காலியில் அமர வைத்து வங்கிக்கு அழைத்து வந்துள்ளார்.

இவ்வாறு அவரை அழைத்து வரும் போதே அவரது தலை தொங்கியிருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தமை தெரியவந்தது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இதனையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்