Last updated on May 21st, 2024 at 01:14 pm

ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு விளக்கமறியல்

ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு விளக்கமறியல்

ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, மற்றொரு காரின் சாரதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர் தூதுவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்குப் பிரவேசித்த பொலிஸார், கொழும்பு 07, வோட் பிளேஸில் வசிக்கும் 33 வயதுடைய வர்த்தகரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர், கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க