இலங்கை தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடாது – எம்.ஏ.சுமந்திரன்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடாதிருக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் வவுனியா – குருமன்காடு காளி கோவில் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில பிரதேசங்களில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க