இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இந்நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புக்களை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவுசெய்து பெற்றுக் கொண்டுள்ளது.

எனவே, எவ்வித சிரமமும் இன்றி இந்த தீர்மானத்தை அமுல்படுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்