கிழக்கு மாகாணத்தில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை

கிழக்கு,  ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை,  தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.