மட்டக்களப்பில் 10 ஆவது நாளாக வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பில் இன்று 10 ஆவது நாளாக வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காந்தி பூங்காவில் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டமானது இன்றுடன் 10 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக தீர்வு கிடைக்கும் வரையிலும் இடம்பெறவுள்ளதாக இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனங்களை வழங்க கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்