-யாழ் நிருபர்-
உபாய கதிர்காமம், புலோலி பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் விழுந்து 24 வயதுடைய இரு வாலிபர்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவரது சடலமும் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் விழுந்ததுடன் அவரை காப்பாற்ற மற்றொரு இளைஞர் கிணற்றுக்குள் குதித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 24 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களே பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.