கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரு மாணவர்கள் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு, கொம்பனி வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து குதித்து இரு மாணவர்கள் உயிரை மாய்த்து கொண்டனர்.
வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த 15 வயதான மாணவனும், மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து இருவரும் குதித்து 3வது மாடியின் மேல்தளத்தில் விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவரும் பாடசாலை முடிந்து குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் 5 வது மாடியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே படிக்கட்டு வழியாக 67வது மாடியை அடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இரு மாணவர்களின் மரணம் தொடர்பில் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள சிசிரிவி காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்