2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரச துறையின் ஊழியர் தர அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, கொவிட் தொற்று பரவலின்போது, வசதியான ஆடைகளுடன் பணிக்கு வருமாறு அரசாங்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையில் 2019 ஜூன் 26 மற்றும் 2022 செப்டம்பர் 27 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.