மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில், சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் இரண்டு விவசாயிகள் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை அதிகாலையில், குடும்பிமலை வயல் பகுதியை குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இதன் போது, அந்த பகுதியில் ஒழித்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிள் இரண்டை மீட்டதுடன், இருவரை கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்த இருவரையும், இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.