நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.