ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
-பதுளை நிருபர்-
பதுளை மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை இங்கமருவ, வீரியபுர பகுதிகளை சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இங்கமருவ மற்றும் வீரியபுர பகுதியில் வைத்து பத்தாயிரத்து எழுநூற்று இருபது மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்