-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில், புரவுன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலைய பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்தனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 3290 மில்லிகிராம் ஜஸ், 360 மில்லிகிராம் ஹேஸ் எனப்படும் போதைப் பொருளை மீட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நெடுங்காலமாக சட்டவிரோதமாக முறையில் இப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற் கொண்ட வேளையில் இந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர், என குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.