பூநகரி பிரதேச செயலகத்தில் பதில் கடமை அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த ச.குணஜா, நேற்று செவ்வாய்க்கிழமை நிரந்தர உதவிப் பிரதேச செயலாளராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது, பிரதேச செயலகத்தின் கணக்காளர் மற்றும் ஏனைய அலுவலர்கள் இணைந்து அவருக்கு வரவேற்பை வழங்கி, புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயலாற்ற தங்களது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
புதிய பொறுப்பை ஏற்றுள்ள ச.குணஜாவுக்கு எதிர்கால பணிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கு பிரதேச செயலகத்தினர் மற்றும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.