மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமொன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து மேற்கொண்ட விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் போது, குறித்த உணவகமானது அடையாளப்படுத்தப்பட்டு, இன்று புதன்கிழமை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
இதன்போது, உணவக உரிமையாளர் 01 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த உணவகமானது சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என, நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.