-திருகோணமலை நிருபர்-
- Advertisement -
எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)’ வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கும் தொடர் பயணத்தின் 55வது நிகழ்வாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் வேண்டுகோளின் பேரில் இன்று வியாழக்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ரூபா 39 இலட்சம் பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் (Dialysis Machine) சஜித் பிரேமதாசவினால் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விக்ரமசிங்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கலான கபில கழுபஹன, . சரத் லொரென்ஸுஹேவா, . திருக்குமார், மாவட்ட முகாமையாளர்கள் ஏ.எஸ்.எம். மஹரூப். . பிரான்சிஸ் அந்தோணி சேகர், பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம்.நெளபர், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் பாத்திஹ் கஸ்ஸாலி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருடன் வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- Advertisement -