ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் 46 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டைச் நிகழ்த்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, மேலும் தப்பியோடிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -