பெண் ஒருவர் எடுத்த செல்ஃபியின் அடிப்படையில் கொள்ளை சம்பவம் இடம்பெற்று 2 மணித்தியாலங்களில் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து இருவர் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர்
இருப்பினும், குறித்த பெண் அந்த நேரத்தில் ஒரு கொள்ளையனின் முகத்தை செல்ஃபி எடுத்துள்ளார். பின்னர் அந்த படத்தை அப்பகுதியில் உள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
- Advertisement -
இதனையடுத்து ஹோமாகம பொலிஸாருக்கு அறிவித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பிடபன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரிடமும் சுமார் பத்தரை கிராம் ஹெரோயின் போதைப்பொருள், ரம்போ கத்தி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
- Advertisement -