கண்டியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான தினுஷ லக்ஷன், இனந்தெரியாத குழுவினால் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி வைத்தியசாலை வீதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்த தனது மகனை கலந்துஐரயாடல் ஒன்றிற்கு என தெரிவித்து ஒருவர் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த சில நபர்கள் தினுஷ லக்ஷனை இரும்பு கம்பிகளால் தாக்கி கடத்தியதாக தினுஷ லக்ஷனின் தாய் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -
தனது மகனின் கையடக்கத் தொலைபேசி கிடைக்காததால் தனது உறவினர்களுக்கு அறிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
தேடிச் சென்ற போது தினுஷ லக்ஷன் வெட்டுக் காயங்கள் மற்றும் எரிந்த காயங்களுடன் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள தனிமையான பகுதியில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
தினுஷ லக்ஷன் அங்கிருந்து மீட்கப்பட்டு கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விசேட பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -