20 நாடுகளுக்குள் இலங்கை

 

சுற்றுலா பயணிகளுக்கான முதல் 20 நாடுகளுக்குள் இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான த டிராவலர் சஞ்சிகை (Condé Nast Traveller) நடத்திய 2022 வாசகர்களின் தெரிவு விருதுகளின் படி, பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கை 17வது இடத்தைப் பெற்றுள்ளது.

சஞ்சிகையின் படி, போர்த்துக்கல்,  ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகியவை பயணிகளுக்கான முதல் மூன்று இடங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேல், துருக்கி மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை விட இலங்கை முன்னணியில் உள்ளது.

த டிராவலர் சஞ்சிகை இலங்கை பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்த தெற்காசிய நாடு மேற்கு வேர்ஜீனியா மாநிலத்தை விட சற்று பெரியதாக இருக்கும் கண்ணை அதிர வைக்கும் பசுமையான உயரமான தேயிலை தோட்டங்கள், கரடிகள் மற்றும் யானைகள் நடமாடும் தேசிய பூங்காக்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொஸ்டாரிகா அல்லது நிகரகுவாவை நினைவுபடுத்தும் நகரங்கள். தலைநகராக கொழும்பு உள்ளது, அங்கு நீங்கள் உள்ளூர் மசாலாப் பொருட்களை வாங்கலாம், கடற்பகுதியில் பட்டம் பறக்கலாம் அல்லது ஒரு படகில் சுற்றுலா வரலாம்.

உலகளாவிய சுற்றுலாப் போட்டியாளராக தனது இடத்தைப் பாதுகாக்க சமீப ஆண்டுகளில் இலங்கை உழைத்துள்ளதால், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு முதல் தொற்றுநோய் வரை சில சவால்களை எதிர்கொண்டு மீண்டு வருகிறது.

நவம்பர் 22 அன்று வெளியிடப்பட்ட அதன் தரவரிசையில், ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா, கிரீஸ், டென்மார்க், யுகே, இத்தாலி, நியூசிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, அயர்லாந்து, குரோஷியா, மொராக்கோ மற்றும் ஸ்வீடன் ஆகியவை தரவரிசை வரிசையில் பிடித்தவைகளாக பட்டியலிடப்பட்ட பிற நாடுகளாகும்.