Sri Lanka Tamil News Site

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் ஓரளவு மழை

- Advertisement -

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

- Advertisement -

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் தென் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

- Advertisement -