பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்க கண்காட்சி

-யாழ் நிருபர்-

பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்க கண்காட்சி ஆரம்பம்

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, சிறப்புவிருந்தினராக யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையையும் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தனர்.

இதில் வடமாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட 38 பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் மகளிர்களின் உற்பத்திப்பொருட்கள் இதன்போது கூடாரம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி இன்று மாலையுடன் இனிதே நிறைவடையும்.

வடமாகாண பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் வ.உமாகாந்தன்,
வடமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ன, வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள்
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன்,மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத், மகளிர்கள், வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம், மதத்தலைவர்கள், சான்றோர், பார்வையாளர்கள் மற்றும் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்க கண்காட்சி ஆரம்பம் பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்க கண்காட்சி ஆரம்பம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்