ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு ப்ரொய்லர் கோழி போன்றவர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொது வெளியில் சாடியுள்ளார்..
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,
“மக்கள் துன்பத்தில் இருக்கும் போது சில பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து நாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அவரும் ரணில் போன்றவர் தான். இன்றுவரை அவர் எதையும் கற்றுக் கொள்ளவில்லை, நாமலுக்கு எந்தவித அனுபவமும் அரசியல் அறிவும் இல்லை.
மக்கள் ஆத்திரமடைவதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர் எப்போதும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர் முன்கூட்டியே வளர்ந்த ஒரு ப்ரொய்லர் கோழி. தகுதி இல்லாதவர்களும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சிப்பீடம் ஏறியது தான் இந்த நாட்டினதும் ராஜபக்ஷ குடும்பத்தினதும் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித்த ராஜபக்ஷவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டனர். டலஸ் அழகப்பெரும தான் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அதை தடுத்து நிறுத்தும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்” என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்