கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் வழங்குநர்களிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் சர்வதேச நாணய நிதிய உதவித் திட்டத்திற்கு இணங்க கடன் மறுசீரமைப்பு திட்டத்தை கடன் வழங்குநர் ஒப்புக்கொள்ளும் வரை, எந்தவொரு கடன் வழங்குநருக்கும், கடன் சேவையை மீண்டும் தொடங்கப்பட மாட்டாது என இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து வெளித்தரப்பு கடன் வழங்குநர்களுக்கும் ஒப்பிடக்கூடிய மறுசீரமைப்புக்கு இலங்கையின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்