அமெரிக்காவில் தொடர்ந்து வங்கிகள் நஷ்டமடைவது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியான அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலான சம்பவம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியாக திகழும் சிலிக்கான் வேலி வங்கி சில நாள்களுக்கு முன்னர் நஷ்டமடைந்தது.
இந்த வங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து வந்த நிலையில், தனது சொத்துக்களைப் பாதுகாப்பாக வைக்க அமெரிக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தது. அந்நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித்ததை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதன் விளைவாக கடன் பத்திரங்களின் மதிப்பு வாங்கிய விலையை விடக் குறையத் தொடங்கியது.
இதே வேளையில் தான் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிலிக்கான் வேலி வங்கியில் வைப்பு செய்த பணத்தை வெளியே எடுக்கத் தொடங்கினர். இதனால், வங்கியின் சொத்துக்களைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதால் நஷ்டமடைந்தது. நஷ்டமடைந்த வங்கி தற்போது காப்பீட்டு நிறுவனமான Federal Deposit Insurance Corporation கட்டுப்பாட்டில் இந்த வங்கி கொண்டு வரப்பட்டுள்ளதால், வைப்பு செய்தவர்களின் பணம் அங்கு சிக்கியுள்ளது.
2008ல் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அங்கு வங்கி மீண்டும் நஷ்டமடைந்தது. பொருளாதார நிபுணர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இரண்டாவதாக ஒரு வங்கி நஷ்டமடைந்து கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கை சேர்ந்த சிக்னேசர் வங்கி, இதே காரணங்களுக்காக நஷ்டமடைந்துள்ளது. இந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 110 அமெரிக்க டாலர் எனவும், வைப்பு மீதத்தொகை 89 அமெரிக்க டாலர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே திவாலாகும் மூன்றாவது பெரிய வங்கியாக இந்த சிக்னேசர் வங்கி உள்ளது.
அடுத்தடுத்து வங்கிகள் நஷ்டமாவதால் வாடிக்கையாளர்களும், முதலீட்டாளர்களும் கலக்கத்தில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த சிக்கலில் உடனடியாக தலையிட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகளை கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை, இந்த பிரச்சனைகளுக்கு முந்தைய டிரம்ப் அரசே காரணம் என்றுள்ளார். இருப்பினும் வங்கிகள் பாதுகாப்பான சூழலில் உள்ளதால் மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்