அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று புதன்கிழமை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கான சம்பளம் இன்று வழங்கப்படவுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் இன்று வழங்கப்படுவதாகவும், சிலவேளைகளில் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளம் ஒரு நாள் தாமதமாகலாம் எனவும் நிதியமைச்சு நேற்று அறிவித்தது.

எவ்வாறாயினும், அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும் என நேற்று பிற்பகல் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.