ஒன்பது மாகாணங்களிலும் குழந்தைகளை தத்தெடுக்கும் சிறப்பு மையங்களை நிறுவ நடவடிக்கை

ஒன்பது மாகாணங்களிலும் குழந்தைகளை தத்தெடுக்கும் சிறப்பு மையங்களை நிறுவ நடவடிக்கை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகளை தத்தெடுக்கும் சிறப்பு மையங்களை நிறுவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க, நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது பல்வேறு காரணங்களால் புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோருக்கு உதவுவதற்காக 2021 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் குழந்தைகளை தத்தெடுக்கும் நிலையங்கள் தொடர்பான முன்மொழிவு வரையப்பட்டதாக தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட குழந்தை பெறும் மையங்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒப்படைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பிரேரணை 2021 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்த அமரசிங்க, எனினும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அமைச்சரவை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சிசுக்களை தத்தெடுக்கும் நிலையங்கள் இந்தியாவில் பிரபலமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவர் உதயகுமார அமரசிங்க, இலங்கையில் அண்மைக்காலமாக சிசுக்கள் கைவிடப்படுவது அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான நிலையங்களை ஸ்தாபிப்பது அவசியமானது எனவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்