அமைச்சரவையினால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அனுமதி
ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை தயாரிப்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்