பிணை எடுப்பு பொதியின் முதல் தவணை இம்மாதம்

பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியதன் பின்னர், இம்மாதம் அதன் முதல் தவணை இலங்கைக்கு கிடைக்கபெறுமென எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி,  2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், எதிர்வரும் 22ம் திகதி முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்