துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது யார்?

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள மயானம் ஒன்றின் மதிலுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில்இ வெளிநாட்டிலிருந்து வருகை தந்த அதனுடன் தொடர்புடைய நபர் ஒருவர் மீது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான புலம்பெயர்வாசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை நேற்று மாலை நாகர்கோவில் பகுதிக்கு பொலிஸார் விசாரணைகளுக்காக சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு குழுமியிருந்த இளைஞர்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில்இ இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸாரின் தாக்குதலினால் இளைஞர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின் இறுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும்இ சம்பவ இடத்தில் வெற்றுத்தோட்டாக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்