ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனிம எண்ணெய் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஹம்பாந்தோட்டையில் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய முதன்மை எரிசக்தி மையத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான முழு முதலீட்டையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தின் பின்னர் விரைவான அபிவிருத்தியை இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்