அரசுடன் தொழிற்சங்க கூட்டமைப்பின் கலந்துரையாடல் தோல்வி

அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றயளிக்கவில்லை என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியிடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை கூட்டத்தின் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை தீர்வொன்று வழங்கப்படும் என கலந்துரையாடலில் இணைந்து கொண்ட அரசாங்க தரப்பின் அதிகாரிகள் தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

எனினும் நேற்றைய தினம் திங்கட்கிழமை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட 4 மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்,

இன்று செவ்வாய் கிழமைக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை புதன்கிழமை சகல மாகாணங்களிலும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்