இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி : நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி

 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய 5ஆம் நாள் ஆட்டத்தின் முதல்பாதி மழையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு 53 ஓவர்களில் 257 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தது.

அதற்கமைய, அவ்வணி 8 விக்கட்டினை இழந்து இறுதிப் பந்தில் வெற்றி இலக்கினை அடைந்தது.

போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக இலங்கை அணி 355 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் நியூசிலாந்து அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 373 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் இந்த தோல்வியின் ஊடாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இழந்ததோடு, அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.