-கல்முனை நிருபர்-
இந்து சமய கலாசார திணைக்களத்தின் வழிகாட்டலில் இந்து சமயம் சார்ந்த கலைஞர்களை ஒன்றிணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்துசமய கலைஞர்களை ஒன்றிணைத்து அருகிவரும் சமயம் சார்ந்த பாரம்பரிய கலைகளை ஆற்றுகைகள் மூலம் ஆவணப்படுத்தும் செயற்திட்டம் தொடர்பாக கலந்துரையாடும் கலைஞர்கள் சந்திப்பு அம்பாறை மாவட்ட இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஒழுங்கமைப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் காரைதீவு விபுலாநந்தா மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு கல்முனை, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள இந்துசமயம் சார்ந்த கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் அவர்களுக்கான கௌரவம் கலைஞர் அடையாள அட்டைகள், விருதுகள் ஆகியவற்றை வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.