காதலன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பெண்

காதலன் மீது  எண்ணெய்யை ஊற்றிய பெண்

இந்தியா தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் வர்ணபுரத்தை சேர்ந்த மீனாதேவி என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

அப்போது உறவுக்கார இளைஞரான கார்த்திக் என்பவருக்கும், மீனாதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இது திருமணம் தாண்டிய உறவாக மாறியது.

இந்நிலையில், கார்த்திக்கிற்கு வேறு பெண்ணுடனும் தொடர்பு இருந்தது மீனாதேவிக்கு தெரியவந்தது.

இது குறித்து மீனாதேவி கார்த்திக்கிடம் கேட்ட போது, அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாக மீனாதேவியிடம் கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஆத்திரம் அடைந்த மீனா தேவி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சமையல் எண்ணெய்யை கார்த்திக் மீது ஊற்றியுள்ளார்.

படுகாயம் அடைந்த கார்த்திக்கை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் மீனா தேவியை கைது வழக்கு பதிவு செய்துசெய்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்