சடலமாக மீட்கப்பட்ட பெண்: ஒருவர் கைது

சடலமாக மீட்கப்பட்ட பெண்:  ஒருவர் கைது

கண்டி – அலவத்துகொட பகுதியில் வயலில் இருந்து சடலமாக பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான குறித்த பெண் திருமணமானவர் எனவும், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வேளையில் குறித்த பெண்ணின் கணவர் மரண வீடொன்றுக்கு சென்று வீடு திரும்பிய போது, மனைவி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் காணமல் போயுள்ளதாக அவரின் கணவர் பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமையவே குறித்த பெண் வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்