ரயிலில் சிசு மீட்பு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ரயிலில் சிசு மீட்பு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலின் மலசலக்கூடத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 நாட்களேயான பச்சிளம் சிசு மீட்கப்பட்ட சம்பவத்தில் அந்த சிசுவின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட அச்சிசுவின் தந்தை, பதுளை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து அவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்